இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும்.. விஜய் பட நடிகை யாருன்னு தெரியுதா..?

By Nanthini on மார்கழி 11, 2024

Spread the love

தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஜெனிலியா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

   

பாய்ஸ் திரைப்படம் மூலம் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்த தமிழில் அறிமுகமான ஜெனிலியா தொடர்ந்து 2000 ஆம் ஆண்டுகளில் விஜய், ஜெயம் ரவி மற்றும் தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

   

 

சச்சின் மற்றும் சந்தோஷ் சுப்பிரமணியம் என அழுத்தமான கதைக்களங்களில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை ஏராளம். தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து வந்தார். பிறகு 2012 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஜெனிலியா படங்களில் நடிக்காமல் இருந்தாலும் தற்போதும் ஹீரோயின் மெட்டீரியலாகவே பலம் வந்து கொண்டிருக்கிறார்.

My children have made me more compassionate': Genelia Deshmukh- The Week

சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். இந்த நிலையில் ஜெனிலியாவின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் நம்ப ஜெனிலியாவா இது என கேட்டு வருகிறார்கள்.