இந்த ஆண்டு நல்ல நல்ல படங்கள் வெளியாகி இருக்கிறது. எல்லா இயக்குனர்களுமே ஒரு கனவு ஒரு லட்சியத்தோடு மக்களிடத்தில் வரவேற்பு பெற வேண்டும் என்று தான் ஒவ்வொரு படத்தையும் இயக்குகிறார்கள். தயாரிப்பாளர்களும் இயக்குனர்களை நம்பி தான் முதலீடு செய்கிறார்கள். என்னதான் நடிகர் நடிகைகள் இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியோரின் உழைப்பு இருந்தாலும் கூட படம் வெளியான பிறகு அது வெற்றியா தோல்வியா என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது.

ஒரு சில படங்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவரும். ஆனால் தோல்வியடைந்து விடும். ஒரு சில படங்கள் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் அது எதிர்பாரா வகையில் மாபெரும் வெற்றி பெறும். மக்களிடத்தில் நல்ல விமர்சனங்களை பெறும். எந்த படமானாலும் நல்ல முறையில் மக்களிடத்தில் சென்றடைந்து மக்கள் தியேட்டர்களில் வந்து பார்க்கும் போது தான் படத்திற்காக பணத்தை முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
உதாரணமாக இந்த வருடம் வெளியான அமரன் திரைப்படம் 110 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று 361 கோடி வசூலித்தது. இதனால் இந்த படத்தை தயாரித்த கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்க்கு மட்டுமே 110 கோடி லாபம் கிடைத்தது. ஒவ்வோரு படமும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் கைக்கு மாறி பின்னர் தியேட்டர் ஓனர்களின் கைக்கு சென்று மக்கள் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறார்கள். இந்த லாபக் கணக்கு எப்படி கணக்கிடுவார்கள் தயாரிப்பாளர்களுக்கு எப்படி லாபம் மற்றும் பங்கு கிடைக்கும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இனி காண்போம்.
தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் ஷேரை பற்றி பிரபல தயாரிப்பாளர் சி வி குமார் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் இப்போது ஒரு 100 ரூபாய் ஒரு டிக்கெட் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதில் 28% ஜிஎஸ்டி சென்றுவிடும் இரண்டு சதவீதம் தியேட்டர் மெயின்டனன்ஸ்க்கு சென்று விடும் மொத்தம் 30 சதவீதம் அவர்களது செலவுக்கு சென்று விடும்.

மீதி இருக்கும் பணத்தில் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு 75 சதவீதம் கிடைக்கும். அதில் டிஸ்ட்ரிபியூட்டர்கள் 15 முதல் 18% வரை அவர்களது கமிஷனை எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமில்லாமல் பேனர் அடிப்பது போஸ்டர் ஒட்டுவது போன்ற செலவுகளையும் அதில் கழித்து மீதி இருக்கும் பணத்தை தான் தயாரிப்பாளர்களுக்கு ஷேர் ஆக கொடுப்பார்கள். இப்படி தான் இது கணக்கிடப்படுகிறது என்று ஓபனாக கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் சி வி குமார்.
