தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் தான் தலைவாசல் விஜய். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக 1992 ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலமானதால் அந்த பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டார். இதனை தொடர்ந்து தலைவாசல் விஜய் தேவர் மகன், மகளிர் மட்டும், விஷ்ணு, கருவேலம் பூக்கள், காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை மற்றும் பிரியமானவளே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். கடந்த 2010 ஆம் ஆண்டு யுக புருஷன் என்ற திரைப்படத்திற்காக இவர் கேரளா அரசின் மாநில விருது, 2012 ஆம் ஆண்டு கர்மயோகி என்ற திரைப்படத்திற்காக தென்னிந்திய திரைப்பட விழாவில் துணை நடிகருக்கான விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். நடிக்க வந்த 27 ஆண்டுகளில் குணச்சித்திர நடிகராக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த காதல் கோட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற கவலைப்படாதே சகோதரா என்ற பாடலுக்கு தலைவாசல் விஜய் நடனமாட இருந்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் பல திறமைகளுடன் கலக்கிய தலைவாசல் விஜய் தற்போதும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தலைவாசல் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு சென்னை ரயில்வே ஸ்டேஷனில் வாசகர் வேலை பார்த்தேன். எந்த ரயில் எந்த நேரத்திற்கு எந்த ஸ்டேஷனில் வந்து நிற்கும் என்பதை வாசித்துக் கொண்டிருப்பேன். ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் அதனை வாசித்து கொண்டிருந்தேன். அந்த சமயத்துல அங்கங்க சிசிடிவி கேமராக்கள் இருக்கும். அதுல பார்த்துட்டு யாராவது சார் நீங்கள் தானே அங்க பேசுனது என்று கேப்பாங்களா என்று நான் நினைத்துக் கொண்டிருப்பேன். அது நான்கு நாட்கள் மட்டும்தான் இருந்தது.

அப்போது சிசிடிவி கேமராவில் ஏதோ வேலை நடந்ததால் நான்கு நாட்களில் திரையில் தோன்றுவதை நிறுத்தி விட்டுட்டாங்க. சினிமாவில் நடித்துக் கொண்டே நான் இந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். தேவர்மகன் திரைப்படத்தில் நடித்த பிறகுதான் நம்மளுக்கு என்று தனி ஒரு அடையாளம் கிடைத்துவிட்டது இனி இந்த வேலையை பார்ப்பது சரியாக இருக்காது என்று நினைத்து அந்த வேலையை விட்டேன். எனக்கு முதலில் டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. அதன் பிறகு கேட்டரிங் படித்தேன். பின்னர் பிஎஸ்சி கணிதம் படித்தேன். இறுதியாக தான் சினிமா துறை மீது ஆசை வந்து திரைப்படக் கல்லூரியில் பயின்றேன். நான் சினிமா துறையில் நடிக்க வந்த போது நாசர், பப்லு உள்ளிட்ட சிலர் கூட்டம் சேர்ந்து கொண்டோம்.

நாங்க எல்லோரும் ஹோட்டலில் வேலை பார்த்து அங்கு சர்வர் வேலை செய்துவிட்டு வர டிப்ஸ் காசை வைத்து போட்டோ எடுத்து அதை தனியா ஒரு ஆல்பம் இல் போட்டு வைத்துக் கொள்வோம். ஞாயிற்றுக்கிழமை அந்த புகைப்படங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மணிவண்ணன் உள்ளிட்ட இயக்குனர்களை சந்தித்து நாங்கள் திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு வந்தோம் என்று கூறி அந்த போட்டோவை காட்டி வாய்ப்பு கேட்போம். நிறைய நாங்க சந்திச்சிருக்கோம். எனக்கு ரஷ்யா கன்ட்ரி ரொம்பவே பிடிக்கும். அங்க ரொம்ப பிடிச்சவங்களுக்கு பணம் தருவாங்க இல்லன்னா ஒரு ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு மீதி பாதியை நம்மளுக்கு தருவாங்க. அதுவும் இல்லை என்றால் ரொம்ப பிடித்தவர்களுக்கு கன்னத்தில் ஏழு முத்தம் கொடுப்பாங்க. அந்த வயசுல எனக்கு முத்தம் என்ற ஆசை தான் வந்தது. இந்த விஷயத்தால் எனக்கு ரஷ்யா நாட்டினரை மிகவும் பிடிக்கும் என்று நாசர் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
