கோவில்பட்டியில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து சினிமா மீது கொண்ட ஆசையால் சென்னைக்கு வந்து தனக்குத் தெரிந்த தொழிலை எல்லாம் செய்து படிப்படியாக சினிமாவில் முன்னேறியவர்தான் நடிகர் காளி வெங்கட். சென்னையில் வியாபாரம் செய்து வந்த இவருக்கு இயக்குனர் விஜய் பிரபாகரனிடம் அறிமுகம் கிடைத்தது. அவரை தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடமிருந்து சினிமாவை காளி வெங்கட் கற்றுக் கொண்டார். அதன் பிறகு தசையினை தீ சுடினும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் விஜய் பிரபாகரனுடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் அதில் தான் நடித்த காளி என்ற கதாபாத்திரத்தின் பெயரை தன்னுடைய பெயருடன் சேர்த்துக் கொண்டார்.

அதுவரை வெங்கட் என அழைக்கப்பட்டவர் அப்போதிலிருந்து காளி வெங்கட் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவருக்கு தனி ஒரு அடையாளம் கிடைத்தது நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சி மூலம் தான். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர்கள் இயக்கிய படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக அதில் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி என்ற குறும்படத்தில் காளி வெங்கட் நடிப்பு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து தெகிடி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்றிய என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த ஆண்டு இவர் நடித்த லப்பர் வந்து திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. சினிமாவில் டஜன் கணக்கிலான படங்களில் தற்போது நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் காளி வெங்கட் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் முதலில் சென்னைக்கு வந்து சினிமாவுக்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் சும்மா இருக்கக்கூடிய நாட்களில் ஏதாவது வேலை கிடைத்தால் போய்விடுவேன். கூடவே என்னுடைய நண்பர்களும் வருவாங்க. அதிகமா வீடு ஷிப்ட் பண்ற வேலைக்கு தான் போய் இருக்கேன். அப்படி வீடு மாத்திரை வாங்க காலையில நாலு மணிக்கே கூப்பிடுவாங்க.

எல்லா பொருளையும் ஏத்தி இறக்கலாம் ஒரு டைம் போய்ட்டு வந்தாலே ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கிடைக்கும். அதுல வர பணத்த வச்சி பெட்ரோல் செலவுக்கு பயன்படுத்துவேன். சில நேரங்களில் சாப்பாட்டுக்கு கூட அந்த காசு தான் பயன்படும். அதனைப் போலவே இசை கச்சேரிகளுக்கு எல்லாம் பொருட்களை ஏற்று இருக்கக்கூடிய வேலைக்கும் நண்பர்களுடன் சேர்ந்து சென்று வருவேன். பெரும்பாலும் சமையல் வேலைக்கு மட்டும் நான் செல்லவே மாட்டேன். ஏனென்றால் எங்க வீட்ல இருக்கவங்க கேட்டரிங் சர்வீஸ் வைத்திருப்பதால் அங்க வேலை செஞ்சுட்டு வெளியில் வந்தும் இதே வேலையை செய்ய வேண்டுமா என்ற எண்ணத்தில் அந்த வேலைக்கு மட்டும் போக மாட்டேன். மற்றபடி என் கூட இருந்த முனுஷ்காந்த் கோயம்பேட்டில் மூட்ட தூக்குற வேலைக்கு எல்லாம் போயிருக்காரு.

என் கூட பயணித்த மற்ற நண்பர்களும் பெயிண்டர் மற்றும் டிரைவிங் என கிடைக்கிற எல்லா வேலைக்கும் போவாங்க. அதனைப் போலவே நான் கஷ்டப்படும் சமயத்தில் ரேஷன் அரிசி கூட சாப்பிட்டு இருக்கேன். ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஏதாவது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று கூட்டமாக சாப்பிட்டுவிட்டு வந்து விடுவோம். நான் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நடித்ததில் கிடைத்த பலன் என்றால் நிறைய சிடி போட்டு வச்சிருக்கேன். படத்துல நடிக்க வாய்ப்பு கேட்கும் போது கூட அதில் இருக்கிற சிடியை போட்டு தான் வாய்ப்பு கேட்பேன். சிலர் அதை கொடுத்துட்டு போ ன்னு சொன்னா கூட நான் அதை தராம அப்படியே வாங்கிட்டு வந்துருவேன். ரொம்ப கஷ்டப்பட்டு தான் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்து நிலையா நின்றேன் என்று காளி வெங்கட் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
