தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் தான் நடிகர் விஷால். சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்த 12 வருடங்களுக்கு முன்பு ரிலீசாக வேண்டிய மதவச்ச ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. 50 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் கடந்த நிலையில் அடுத்து விஷால் படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே சமயம் விஷால் மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் காக வந்திருந்த சமயத்தில் மைக்கு பிடித்த அவர் கைகள் நடுங்கிய வீடியோக்கள் வெளியான நிலையில் விஷாலுக்கு உடல்நிலை கோளாறு என ஏராளமான வதந்திகள் பரவியது.

ஆனால் அதெல்லாம் கிடையாது காய்ச்சல் காரணமாகத்தான் அன்று அப்படி இருந்தேன் இப்போ என்னோட கை நடுங்கள மைக் ஆடவில்லை என்று மதகஜராஜா படத்தின் வெற்றி விழாவில் கெத்தாக விஷால் பேசி இருந்தார். தற்போது விஷால் அடுத்த படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் இவ்வாறு சங்கத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற போது நடிகர் சங்கத்திற்கு தனி கட்டிடம் கட்டிவிட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்திருந்தார். இன்றும் பலரும் விஷால் எப்போது தான் திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வியை முன்வைத்து வருகிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடத்தை பிறகு கட்டிக் கொள்ளலாம் ரொம்பவும் வயசு ஆவதற்கு முன்பு கல்யாணத்தை செய்ய சொல்லுங்க என்று பலரும் கூறுகிறார்கள். இப்படியான நிலையில் நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய திருமணம் குறித்து பேசி உள்ளார். அதில், கார்த்தி பார்த்துகிட்டு இருக்கான். இன்னும் நான்கு மாசத்துல நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா இருக்கும். அதற்கான வேலையில் கார்த்தி ரொம்பவும் தீவிரமா இறங்கியுள்ளான். அதன் பிறகு எல்லாம் நல்லதாகவே நடக்கும். நடிகர் சங்கம் கட்டிட திறப்பு விழாவிற்கு பத்திரிக்கையோடு விரைவில் வருவேன்.

நடிகர் சங்க கட்டிடத்தை நாங்கள் திரையுலகின் கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு இடமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். தினமும் அங்கு ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கும். முதல் நாள் நாசர் அவருடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் என்றால் மறுநாள் பசுபதி சார் விருமாண்டி படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்து கொள்வார். அதனைப் பார்க்க திரை துறையில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிட்டு வருகின்றோம் என்று விஷால் அந்த பேட்டியில் பேசியுள்ள நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் நான்கு மாதத்தில் முடிந்த பிறகு விஷால் திருமண தேதியை அறிவிப்பார் என தெரிகிறது.
