விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவரக்கூடிய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசர்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் முதல் நான்கு சீசங்கள் சக்கை போடு போட்ட நிலையில் கடைசியாக நடந்து முடிந்த ஐந்தாவது சீசன் பல சண்டைகளுடனும் சர்ச்சைகளுடனும் முடிவடைந்தது. கடைசி சீசனில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனதற்கு புக்குகள் மற்றும் கோமாளிகள் மட்டுமல்லாமல் அதன் நடுவர்களும் முக்கிய காரணம் தான்.

அதன்படி இந்த நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களுக்கு நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் இருந்து வந்த நிலையில் கடைசியாக நடைபெற்ற ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட் திடீரென விலக அவருக்கு பதிலாக புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கினார். இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோவும் சமீபத்தில் வெளியானது. இதில் புதிதாக பிக் பாஸ் சௌந்தர்யா இடம் பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதிய நடுவர் ஒருவர் களமிறங்க உள்ளார். ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்து வரும் நிலையில் தற்போது செஃப் கவுசிக் என்பவர் மூன்றாவது நடுவராக கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கியுள்ளார்.
