Categories: சினிமா

சூர்யா வேண்டாம் என்று நிராகரித்த படங்கள்.. அவரே வியக்கும் அளவுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த மூவிஸ் லிஸ்ட்..!

Spread the love

தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகராக வளர்ந்து வந்தார் சூர்யா. 2000 களில் உத்வேகம் பெற்ற அவரின் வளர்ச்சி 2010 களில் உச்சம் தொட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் அதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது.  அதன் பின்னர் அவரால் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தைக் கொடுக்க முடியவில்லை.  இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் அவருடைய கேரியரில் ஒஸ்ட் படமாக அமைந்தது.

இந்த நிலையில் சமீபகாலமாக சூர்யா நிராகரித்த படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக மாறி உள்ளது.அதாவது கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த திரைப்படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் கூறிய நிலையில் அவர் நிராகரித்ததால் அதன்பிறகு இந்த படத்தில் கமிட் ஆகி கார்த்தி நடித்ததை தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்திலும் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் அவர் இந்த திரைப்படத்தை நிராகரித்ததை தொடர்ந்து கார்த்தி கைதி திரைப்படத்தில் நடித்தார். அந்த நேரத்தில் சூர்யா பாலிவுட்டில் கர்ணா என்ற பெரிய பட்ஜெட் படத்தை பண்ணுவதற்காக இதை நிராகரித்து விட்டார். இந்தத் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன் பிறகு ஆர்யா நடித்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சர்பட்டா பரம்பரை. இந்த திரைப்படத்திலும் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் பிறகு நிராகரித்து விட்டாராம். அதே சமயம் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பனங்கான் திரைப்படத்திலும் முதலில் சூர்யா நடிக்க கமிட்டாகி இருந்த நிலையில் பிறகு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார். பின்னர் வணங்கான் படத்தின் இயக்குனர் பாலா அருண் விஜயை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி முடித்தார்.

அதனைப் போலவே தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்திலும் நடிப்பதற்கு முதலில் சூரியா கமிட் ஆகி இருந்த நிலையில் கங்குவா திரைப்படத்தை நம்பி இந்த திரைப்படத்தை நிராகரித்து விட்டார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இத்தனை படங்களை சூர்யா நிராகரித்து விட்ட நிலையில் ஒருவேளை இந்த திரைப்படங்களில் எல்லாம் அவர் நடித்திருந்தால் அவருடைய கேரியரின் உச்சத்தை அடைந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago