தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகராக வளர்ந்து வந்தார் சூர்யா. 2000 களில் உத்வேகம் பெற்ற அவரின் வளர்ச்சி 2010 களில் உச்சம் தொட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் அதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவரால் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தைக் கொடுக்க முடியவில்லை. இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் அவருடைய கேரியரில் ஒஸ்ட் படமாக அமைந்தது.

இந்த நிலையில் சமீபகாலமாக சூர்யா நிராகரித்த படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக மாறி உள்ளது.அதாவது கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த திரைப்படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் கூறிய நிலையில் அவர் நிராகரித்ததால் அதன்பிறகு இந்த படத்தில் கமிட் ஆகி கார்த்தி நடித்ததை தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்திலும் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் அவர் இந்த திரைப்படத்தை நிராகரித்ததை தொடர்ந்து கார்த்தி கைதி திரைப்படத்தில் நடித்தார். அந்த நேரத்தில் சூர்யா பாலிவுட்டில் கர்ணா என்ற பெரிய பட்ஜெட் படத்தை பண்ணுவதற்காக இதை நிராகரித்து விட்டார். இந்தத் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன் பிறகு ஆர்யா நடித்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சர்பட்டா பரம்பரை. இந்த திரைப்படத்திலும் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் பிறகு நிராகரித்து விட்டாராம். அதே சமயம் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பனங்கான் திரைப்படத்திலும் முதலில் சூர்யா நடிக்க கமிட்டாகி இருந்த நிலையில் பிறகு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார். பின்னர் வணங்கான் படத்தின் இயக்குனர் பாலா அருண் விஜயை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி முடித்தார்.

அதனைப் போலவே தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்திலும் நடிப்பதற்கு முதலில் சூரியா கமிட் ஆகி இருந்த நிலையில் கங்குவா திரைப்படத்தை நம்பி இந்த திரைப்படத்தை நிராகரித்து விட்டார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இத்தனை படங்களை சூர்யா நிராகரித்து விட்ட நிலையில் ஒருவேளை இந்த திரைப்படங்களில் எல்லாம் அவர் நடித்திருந்தால் அவருடைய கேரியரின் உச்சத்தை அடைந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
