96 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு எது தெரியுமா…? இது மிக பிரபலமான நாடுகளில் ஒன்று தான்…

By admin on மாசி 2, 2025

Spread the love

குழந்தைகள் தான் நம் வீட்டின் கண்கள் நாட்டின் எதிர்காலம் என்று கூறுவார்கள். நம் அடுத்த சந்ததியினருக்கு அஸ்திவாரமே குழந்தைகள் தான். உலகில் ஏராளமான நாடுகள் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். ஆனால் ஒரு பிரபலமான நாட்டில் குழந்தையே பிறக்காது கடந்த 96 ஆண்டுகளாக அந்த நாட்டில் குழந்தையே பிறக்கவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இனி காண்போம்.

   

96 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாட்டின் பெயர் தான் வாடிகன் நகரம். உலகின் மிகச் சிறிய நாடு இதுதான். இதுவரை இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லையாம். இந்த நாடு 1929 பிப்ரவரி 11 இல் உருவாக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அனைத்து பெரிய தலைவர்களும் இங்கு வாழ்கின்றனர். போப் இங்கேதான் ஆட்சி செய்கிறார்.

   

ஆனாலும் இவ்வளவு பிரபலமான நாடாக இருந்தாலும் ஏன் இந்த நாட்டில் குழந்தை பிறக்கவில்லை? அங்கு வாழும் பெண்கள் கர்ப்பமே தரிக்க மாட்டார்களா என்று உங்களுக்கு சந்தேகம் எனலாம். இந்த நாடு உருவான பிறகு பலமுறை மருத்துவமனை வேண்டும் என்று அனைவரும் கூறியபோதும் இங்கு நிராகரிக்கப்பட்டது. இங்கு யாராவது தீவிர நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஒரு பெண் கர்ப்பமானாலோ அவர்கள் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு தான் அனுப்பப்படுகிறார்கள். இந்த நாட்டில் மருத்துவமனைகளே கிடையாது.

 

வாடிகன் நகரத்தின் பரப்பளவு 118 ஏக்கர் மட்டுமே. அனைத்து நோயாளிகளும் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு தான் சிகிச்சைக்காக செல்ல வேண்டும். அதனால் ஒரு பெண் கர்ப்பம் தரித்தவுடன் அவர்களுக்கு குழந்தை பிறக்க வேண்டிய நேரம் வருவதற்கு முன்னரே ரோமுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள் அல்லது அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து விடுவார்கள். வாடிகன் நாட்டின் விதிகளின்படி குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்தில் தாயானவள் அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்ற விதி அங்கே கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல் வாடிகன் நகரில் யாருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவது இல்லை. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது பதவிக்காலம் வரையே இங்கு இருப்பார்கள். அவர்கள் தற்காலிக குடியுரிமையை தான் பெற்றிருப்பார்கள். இது போன்ற காரணத்தினால் தான் இந்த நாட்டில் குழந்தையே பிறப்பதில்லை. இது ஒரு வினோதமான செய்தியாக தான் இருக்கிறது.