சொந்தமாக தயாரிப்பு நிறுவனம், ரியல் எஸ்டேட் என கோடிகளில் புரளும் சூர்யா.. வாயைப்பிளக்க வைக்கும் ROLEX-இன் சொத்து மதிப்பு…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.  தனது திறமையால் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து  தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு புறநானூறு படத்தில் நடிக்கிறார்.

   

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படட்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். ஆனால் அதிலிருந்து விலகிவிட்டதாக புதிய தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவர் நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்பொழுது நடிகர் சூர்யா தனது தந்தையை காட்டிலும் நடிப்பில் சிறந்து விளங்கி, பல்வேறு விருதுகளையும் பெற்று தந்தையை பெருமைப்பட வைத்துள்ளார்.

Surya

இப்படி சினிமாவிலும், ரியல் லைஃபிலும் ஹீரோவாக ஜொலித்து வரும் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வெளியாகியுள்ளது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் சூர்யாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.186 கோடி என கூறப்படுகிறது.

சென்னை மற்றும் மும்பையில் சொகுசு வீடுகள் வைத்துள்ளார் சூர்யா. நடிகராக மட்டுமின்றி தன்னுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகவும் ஜொலித்து  வருகிறார் சூர்யா. இந்தநிறுவனத்தின் மூலம் ஏராளமான வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். தற்போது ஒரு படத்துக்கு ரூ. 20 முதல் 25 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். இதுமட்டுமின்றி விளம்பரங்களில் நடிக்க ரூ.2 கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.

கார்கள் மீது ஆர்வம் கொண்ட சூர்யா,  BMW 7 Series 730Ld – ரூ.1.38 கோடி, Jaguar XJ L – ரூ. 1.10 கோடி, Audi Q7 – ரூ. 80 லட்சம், Mercedes-Benz M-Clas – ரூ. 60 லட்சம் என ஏராளமான சொகுசு கார்களையும் வாங்கியுள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 8.5 மில்லியன் போல்லவெர்களும், ட்விட்டரில் 9 மில்லியன் போல்லவெர்களும் பின்தொடர்கின்றனர்.  இதுதவிர ஏராளமான தொழில்களையும் செய்து அதன் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் சூர்யா.