தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகராக வளர்ந்து வந்தார் சூர்யா. 2000 களில் உத்வேகம் பெற்ற அவரின் வளர்ச்சி 2010 களில் உச்சம் தொட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் அதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவரால் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தைக் கொடுக்க முடியவில்லை.
இடையில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய வெற்றி படங்கள் அமைந்தாலும் அவை ஓடிடியில் ரிலீஸாகின என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவுக்குள் எதிர்பாராத விபத்தாகவே சூர்யாவின் வருகை இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகவே, அவருக்கு பதில் சூர்யா உள்ளே வந்தார்.
சினிமாவில் நுழைந்தபோது எதுவும் தெரியாமல் வந்தாலும் படிப்படியாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு முன்னணி நடிகரானார். 2000 களில் கஜினி, காக்க காக்க, சிங்கம், அயன் மற்றும் வாரணம் ஆயிரம் என பல ஹிட் படங்களைக் கொடுத்து விஜய், அஜித்துக்கு நிகராக உருவானார். ஆனால் கடைசியாக ஒரு ஹிட் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதற்கு சூர்யா கதை மேல் நம்பிக்கை வைக்காமல், தானும் விஜய் அஜித் போல வரவேண்டும் என ஆசைப்பட்டதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சூர்யா பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பார்ப்போம். சூர்யா திரையுலகிற்கு வந்த ஆரம்ப ஆண்டுகளில் ஒரு ஹிட் கொடுக்க பல ஆண்டுகள் காத்திருந்தார். காக்க காக்க திரைப்படம்தான் அவரின் முதல் கமர்ஷியல் ஹிட் படம். அதன் பின்னர் தன்னுடைய உடல் வாகு, காஸ்ட்யூம் டிசைன், ஹேர்ஸ்டைல் என எல்லாவற்றையும் மாற்றினார்.
அப்படி தன்னிடம் நடந்த ஒரு மாற்றத்துக்கு சிங்கப்பூரை சேர்ந்த ஒரு ரசிகர்தான் காரணம் என சொல்லியுள்ளார். அதில் “நான் ஆரம்ப காலங்களில் ‘பேண்ட்டை ‘ இடுப்புக்கு மேல் போட்டிருப்பேன். சிங்கப்பூரில் இருந்து என்னை ஒரு ரசிகர் தொடர்பு பேண்ட்டை நீங்கள் லோ ஹிப்பில் போட்டால் நன்றாக இருக்கும் என்றார். அதன்பிறகு அதை நான் பாலஓ செய்கிறேன். இப்படி எனக்கு சிங்கப்பூர் மக்களிடம் இருந்து பல அட்வைஸ்கள் கிடைத்துள்ளன.” எனக் கூறியுள்ளார்.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வினோதமான கோரிக்கை ஒன்றை விடுத்ததற்காகக்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உடல்நிலை பாதிப்பு காரணமாகத் தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில், சமூக வலைதளங்கள்…
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர்ச் சூழலால் ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் "மிகவும் தீவிரமான"…
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், 7 வயது சிறுமி 11 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…