அப்போ பரோட்டா சூரி.. இப்போ ஆக்ஷன் ஹீரோ.. உழைப்பினால் முன்னேறிய சூரியின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா..?

By Priya Ram on ஜூன் 3, 2024

Spread the love

பிரபல நடிகரான சூரி கடந்த 2009-ஆம் ஆண்டு ரிலீசான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படத்தில் போட்டி போட்டு சூரி பரோட்டா சாப்பிடுவார். அதன் பிறகு அவர் பரோட்டா சூரி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். மதுரையைச் சேர்ந்த சூரியின் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி ஆகியவை எதார்த்தமாக இருக்கும்.

Soori News in Tamil, Latest Soori News online, Photos, Videos, சூரி செய்திகள் தமிழில்- News 18 Tamil

   

முதல் படத்திலிருந்தே சூரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார். நான் மகான் அல்ல, களவாணி, குள்ளநரி கூட்டம், அழகர்சாமியின் குதிரை, போராளி, வாகை சூடவா, மனம் கொத்தி பறவை, சுந்தரபாண்டியன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் சூரி நடித்தார். ஒவ்வொரு படத்திலும் சூரியின் காமெடி ரசிக்கும் விதமாக இருக்கும். காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, விவேக் வடிவேலு, சந்தானம், ஆகியோரது வரிசையில் சூரியும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

   

நடிகர் சூரி பற்றிய தகவல்கள்!

 

முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் சூரி நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படம் மூலம் சூரி ஹீரோவாக வளர்ந்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. விடுதலை படத்தின் இரண்டாவது பாகமும் விறுவிறுப்பாக எடுக்கப்படுகிறது. கடந்த 31-ஆம் தேதி சூரி நடித்த கருடன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் சூரியை பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்.! அட இவ்வளவு கஷ்ட்டபட்டாரா இது தெரியாம போச்சே | Tamil360Newz

 

ரிலீசான இரண்டு நாட்களில் படம் சுமார் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக சூரியின் நடிப்பில் உருவான கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழுமலை ஆகிய படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. காமெடி கதாபாத்திரத்தில் திரையுலகில் என்ட்ரி கொடுத்த சூரி இப்போது ஆக்ஷன் ஹீரோவாக கலக்குகிறார். ஒரு படத்தில் நடிக்க சூரி 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதன்படி சூரியின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மதுரையில் அவருக்கு சொந்தமாக ஹோட்டலும் உள்ளதாம்.

actor soori tweet about Etharkkum Thunindhavan | nakkheeran