Categories: சினிமா

சிறந்த நடிகருக்கான விருதை நிராகரித்த நடிகர் சுதீப்.. அவர் சொன்ன காரணத்தை கேட்டா நீங்களே பாராட்டுவீங்க..

Spread the love

கன்னட திரை உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் கிச்சா சுதீப். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய இவ்வாறு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். கன்னடத்தில் பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழில் நான் ஈ திரைப்படம் மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தென்னிந்திய சினிமாவில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அந்த திரைப்படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். ஸ்டார் ஹீரோவான சுதீப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கொள்ளையடித்தார். தமிழில் அஜித் மங்காத்தா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததை போல் இவரை கூறலாம்.

இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் முன்னணி ஸ்டார் ஆக வலம் வரும் இவர் பிறமொழி திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தினார். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அதிக திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் கன்னடம் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கினார்.

இப்படி சினிமா துறையில் மிகப்பெரிய ஸ்டார் ஆக இருக்கும் சுதீப் கடந்த 2001 ஆம் ஆண்டு பிரியா ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு சான்வி என்ற அழகிய ஒரு மகளும் உள்ளார்.  இந்நிலையில், “கர்நாடக அரசின் 2019 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை நிராகரிப்பதாக சுதீப் அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக விருதுகள் வாங்குவதை அவர் நிறுத்திவிட்டதாகவும் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். கலைக்காக தங்களை அர்ப்பணித்து நிறைய பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்”.

Soundarya

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

7 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

7 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

7 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

8 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

8 மணத்தியாலங்கள் ago