அரை ட்ரவுசர் போட்டு பாத்தது.. ‘அப்புறம் இப்பதான் அழகரை இவ்ளோ கிட்ட பாக்குறே’.. நடிகர் சூரி நெகிழ்ச்சி..!

By Mahalakshmi on சித்திரை 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி விடுதலை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் சூரி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சூரி தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

   

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது .சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர் சூரி இந்த நிகழ்ச்சியில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மதுரையில் பிறந்து வளர்ந்த போதிலும் அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

   

 

மேலும் இந்த நிகழ்வு குறித்து பகிர்ந்திருந்த சூரி அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து , முதன்முதலில் அழகரை பார்த்தேன். “இவர்தான்டா அழகர்..நல்லா பாரு” என்றார் அப்பா… மறக்க முடியாத நாள் அது… அதுக்கப்புறம் இப்போது தான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன் .. பேரானந்தம்.. நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Actor Soori (@soorimuthuchamy)