தமிழை தாண்டி அக்கட தேசத்துக்கு செல்லும் நடிப்பு அரக்கன்.. PAN இந்திய ஸ்டாராக மாற போட்ட அஸ்திவாரம்..!!

By admin on சித்திரை 6, 2024

Spread the love

பிரபல நடிகரான எஸ். ஜே சூர்யா ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என அன்புடன் அழைக்கப்படுகிறார். ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Actor SJ Surya

   

இந்த நிலையில் மலையாள திரை உலகில் பிரபல நடிகரான பகத் பாஸில் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். தற்பொழுது விபின் தாஸ் இயக்கும் அடுத்த படத்தில் பகத் பாசில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

   

Actor SJ Surya

 

இந்நிலையில் விபின் தாஸ் ஹைதராபாத்தில் எஸ்.ஜே சூர்யாவை சந்தித்து படம் குறித்து பேசி உள்ளார். எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகர்களான பகத் பாஸிலும் எஸ். ஜே சூர்யாவும் ஒரே படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். எஸ்.ஜே சூர்யா இந்த படத்தின் மூலம் மல்லுவுட்டிலும் அறிமுகமாக போவது குறிப்பிடத்தக்கதாகும்.