தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கென தற்பொழுது பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் நடிப்பில் வெளியான மாவீரன், அயலான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் எஸ்கே 21 படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இதை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை. தற்பொழுது இவர் கிட்டத்தட்ட 70 கோடி ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்குகிறாராம். இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் புதிதாக whatsapp சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் மூலம் இனிமேல் புதுப்புது அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து செம குஷியில் உள்ளனர். இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு…
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…
நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…