CINEMA
ரசிகர்களின் செயலால் லட்சக்கணக்கில் அபராதம் செலுத்திய அஜித்.. உண்மையை போட்டுடைத்த நடிகர் சிங்கம் புலி..!
நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க அஜித் கமிட் ஆகியுள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். அஜித் மீது ரசிகர்கள் தங்கள் உயிரையே வைத்துள்ளனர்.
ஆரம்பத்தில் நடிகர் அஜித் ரசிகர்கள் செய்த செயலால் கோபத்தில் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். அஜித் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கும் ரசிகர்கள் வந்து கலாட்டா செய்ததால் பெரும்பாலும் அஜித் உள்ளூர்களில் படபிடிப்பு என்றால் சம்மதிக்கவே மாட்டார். வெளிநாடு ஹைதராபாத் உள்ள இடங்களில் படபிடிப்பை நடத்த சொல்லுவார். இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான சிங்கம் புலி அஜித் பற்றிய தகவலை கூறியுள்ளார்.
சிங்கம்புலி அஜித்தை வைத்து ரெட் படத்தை இயக்கினார். அந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடைபெற்றது மேலும் ஒரு திருமண விழாவிற்கு சிங்கம்புலியும் அஜித்தும் செல்வதாக இருந்தது. இதனை அறிந்த ரசிகர்கள் திருமண மண்டபத்திற்கு முன்பு கூட்டமாக நின்றனர். உடனே அஜித் திருமணத்திற்கு வராமல் அப்படியே சென்று விட்டார். இதனால் அஜித் ரசிகர்கள் மண்டபத்தில் கலவரம் செய்து அனைத்து பொருட்களையும் சூறையாடி கலாட்டா செய்தனர். அந்த இடத்தில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதன் பிறகு சிங்கம்புலி அஜித்தை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றுள்ளார். உடனே அஜித் தேவை இல்லாமல் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் கட்டியதுதான் மிச்சம். பேசாமல் நான் கலந்து கொள்ளும் காட்சிகளுக்கு தனியாக ஒரு செட்டு போட்டு படமாக்கி விடுங்கள். இந்த அளவுக்கு ரசிகர்கள் செய்வார்கள் என நான் நினைக்கவில்லை எனக் கூறினாராம். அவர் கூறியபடி சிங்கம் புலி ஹைதராபாத்தில் செட்டு போட்டு அங்கு தான் படத்தை எடுத்ததாக கூறியுள்ளார்.