கோட் சூட்டில், செம கெத்தாக… பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு… செம ஹேன்சமா இருக்காரே… புகைப்படங்கள் உள்ளே…

கோட் சூட்டில், செம கெத்தாக… பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு… செம ஹேன்சமா இருக்காரே… புகைப்படங்கள் உள்ளே…

தமிழ் சினிமாவில் உச்ச  நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிகர் டி ராஜேந்திரனின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இவர் நடிப்பில் இறுதியாக ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு கமலஹாசன் தயாரிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் ‘எஸ்டிஆர் 48 ‘ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்திற்காக இவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து, மாஸ் லுக்கில் வலம் வரும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

மேலும் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு, சிம்புவின் தந்தை டி ராஜேந்தர், கௌதம் கார்த்திக், ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இத்திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது.  இந்த விழாவில் நடிகர் சிம்பு கோட் சூட் அணிந்து கெத்தாக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் ‘இனி தனது ரசிகர்களை தலைகுனிய விட மாட்டேன்’ என்று சிம்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.

மேலும் அவர் ரசிகர்களை பார்த்து, ‘இனி எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். நான் தமிழ் சினிமா, தமிழ் மக்கள் பெரும் அளவிற்கு நிச்சயம் வருவேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Begam