பிரபல காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி மற்றும் மகனை பார்த்திருக்கீங்களா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவில் வைகை புயல் வடிவேலுவுடன் எண்ணற்ற படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் முத்துக்காளை.

   

இவர் ஒரு காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர். ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ என்று திரைப்படத்தில் ‘செத்து செத்து விளையாடுவோமா’ என்ற டயலாக் மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் இவர் மிகப் பிரபலம் அடைந்தார்.

இவரது சொந்த ஊர் ராஜபாளையம் சங்கம் பட்டி. இவர் திரையுலகில் பைட் மாஸ்டராக வரவேண்டும் என்றுதான் மிகவும் ஆசைப்பட்டாராம்.

புரூஸ்லீ ஜாக்கிசான் படங்கள் இவருடைய ஃபேவரிட் படங்கள் என்றும் இவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது 12 வயதிலேயே சண்டை கற்றுக்கொள்ள ஆரம்பித்த இவர், 18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கினார். இவர் நடிகர் முரளி நடித்த இரணியன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முதன்முதலாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பிரபுவின் நடிப்பில் வெளியான பொன்மனம் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் நடிப்பில் இதுவரை 250 திரைப்படங்களுக்கு மேல் வெளியாகி உள்ளது. இவர் குடிப்பழக்கம் அதிகம் கொண்டவர்.

இதைப் பார்த்த வடிவேலு கூட அவரை ஒரு முறை உன் குடும்பத்தை பற்றி அக்கறை கொண்டு குடிப்பழக்கத்தை நிறுத்து என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.

தற்பொழுது இவர் மெல்ல மெல்ல குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளார்.

இவர் பாலிவுட் திரையுலகில் மேரே இந்தியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகர் முத்துக்காளைக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் உள்ளார். தற்போது இவரின்  குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.