நடிகைகள் அம்பிகா, ராதாவுக்கு இன்னொரு சகோதரி இருக்காங்களா?… இவங்களை இதுவரைக்கும் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க…

நடிகைகள் அம்பிகா, ராதாவுக்கு இன்னொரு சகோதரி இருக்காங்களா?… இவங்களை இதுவரைக்கும் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க…

நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவருமே 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள். நடிகை அம்பிகா தனது 14 வயதில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து 1979இல் வெளியான ‘சக்காளத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்நது நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை அம்பிகாவை தொடர்ந்து திரை உலகில் கால் பதித்தவர் அவரது சகோதரி நடிகை ராதா.

இவர் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவரும் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இருவரும் தற்பொழுது வரை திரையுலகில் பிசியாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவரும் சகோதரிகள் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுக்கு ஒரு சகோதரி உள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இவர்களின் மற்றொரு சகோதரியின் பெயர் தான் மல்லிகா. நடிகை அம்பிகா தனது சகோதரி மல்லிகாவுடன் ரயில் பயணம் செய்த புகைப்படம் ஒன்றை தற்பொழுது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு தற்பொழுதுதான் தனது சகோதரியுடன் ரயில் பயணம் செல்வதாகவும், இந்த ரயில் பயணத்தின் போது வாட்டர் பாட்டில், நியூஸ் பேப்பர், பழங்கள், பொறிகள் என வாங்கிச் செல்வதாகவும் பதிவு செய்துள்ளார் நடிகை அம்பிகா. தற்பொழுது இவர் தனது சகோதரி மல்லிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Begam