
CINEMA
என்னது…! பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சித்தார்த்தா…? அதுவும் இந்த கதாபத்திரமா…? இணையத்தில் கசிந்த (வீடியோ).
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பத்திற்காக தனது கனவை தியாகம் செய்து வாழும் பெண்ணாக பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இவரின் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சதீஷின் நடிப்பிற்காக இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இவருக்கென்று சமூக வலைத்தளங்களில் தனியாக கோபி ஆர்மி என்று உருவாக்கப்பட்டு ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
தற்போது இந்த சீரியலில் கோபியை விவாகரத்து செய்த பாக்கியா அடுத்தடுத்து தனது முயற்சியால் வளர்ந்து வருகிறார். தற்பொழுது இந்த சீரியலில் பாக்கியாவின் கேட்டரிங் கான்ட்ராக்ட் அவரை விட்டு கை நழுவி உள்ளது. நேரம் பார்த்து பாக்கியாவை ராதிகா பழிவாங்கியுள்ளார்.இதைத்தொடர்ந்து இனி பாக்கியா என்ன செய்ய போகிறார் என அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தற்பொழுது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புது வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் நடிகர் சித்தார்த் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அமிர்தாவின் குழந்தை நிலா தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சித்தார்த் பைக்கில் விழுந்து விடுகிறார். அப்போது குழந்தையை சித்தார்த் காப்பாற்றுகிறார். இப்படி சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் சித்தார்த் சீரியலில் நடிக்கிறாரா? என ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவர் சித்தா என்ற அவரது திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த சீரியலில் அவர் அறிமுகம் ஆகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram