தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு ரிலீசான ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக ஸ்ரீகாந்த் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தெலுங்கு திரையுலகில் இவரை ஸ்ரீராம் என அழைக்கின்றனர். முதல் படத்திலேயே ஸ்ரீகாந்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்ததாக சினேகாவுடன் இணைந்து ஏப்ரல் மாதத்தில் படத்தில் ஸ்ரீகாந்த் நடித்தார். கரு பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன் கனவு திரைப்படம் உருவானது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்காக இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து ஜூட், வர்ணஜாலம், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பம்பரக் கண்ணாலே, சதுரங்கம் நண்பன் உள்ளிட்ட படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு சதுரங்கம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கரு .பழனியப்பன் இயக்கினார். சமீபத்தில் ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது சதுரங்கம் திரைப்படத்தில் கடின முயற்சியோடு நடித்தேன். அந்த படத்தின் பூஜை நடைபெற்ற போது பிசினஸும் நடந்து முடிந்தது. ஆனால் அந்த பணத்தை சொந்த செலவுக்காக செலவு செய்தார்கள். இதனால் படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது.
அந்த படத்தை மீட்க முயற்சி செய்தவர்களுக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. கடைசியில் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் நானும் பணம் கொடுத்தேன். சதுரங்கம் படத்தை ரிலீஸ் செய்வதற்காக பிறரிடம் இருந்து கடன் வாங்கி, ரிலீஸ் செய்வதில் சிக்கலை கொண்டு வந்தார்கள். நான் வாங்காத பணத்திற்காக நானே கடன் வாங்கி பல மாதங்கள் வட்டி கட்டினேன். இப்படி நிறைய சம்பவங்கள் நடந்திருக்கிறது என தனது மனக்குமுறல்களை கூறியுள்ளார். ஸ்ரீகாந்த் யாரை குறிப்பிட்டு கூறுகிறார் என்பது தெரியவில்லை.