கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் சிவராஜ்குமார். இவர் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கேமியோ ரோலில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். கடந்த ஆண்டில் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு புற்றுநோய் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் சிவராஜ்குமார் இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சிவராஜ்குமார் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆபரேஷனுக்காக நானஜ் அமெரிக்கா சென்றேன்.
போகும்போது கண்கள் முழுக்க கண்ணீர் தான். ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டேன். மீண்டும் வருவோமா மாட்டோமா என்பது தெரியாது. டாக்டர்கள் கேரண்டி கொடுத்திருந்தாலும் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது. அமெரிக்காவுக்கு போகும்போது எல்லோருமே அமைதியாக இருந்தோம். ஆப்ரேஷன் அன்று காலை எனக்கு ஏதோ கொடுத்தார்கள். நான் மயக்க நிலைக்குச் சென்றேன்.
ஐந்து அல்லது ஆறு மணி நேரம் கழித்து விழித்து பார்த்த போது எனது மனைவி அருகில் இருந்தார். அவரது கையைப் பிடித்த போது, மீண்டும் நான் உன் கையைப் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை என்றுதான் சொன்னேன். எனக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அதற்கு பிறகு எனக்கு இந்த உலகமே வேறு மாதிரி தெரிந்தது என்று நடிகர் சிவராஜ்குமார் எமோஷனலாக கூறியிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபையனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயார்…
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அம்மாநில அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் வெளியுறவு…
தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கி வரும்…
தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், மக்கள் நலன் சார்ந்த இந்த அரசில் அவர்களின் உரிமைகள்…
திமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று…
தமிழக அரசியலில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கும், உதயநிதி ஸ்டாலினுக்குமிடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. சட்டசபையில் எழும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு…