‘45 தி மூவி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ள கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமாரிடம், “தமிழகத்தைப் போல கர்நாடகாவில் நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருவதில்லை?” என்ற கேள்வி செய்தியாளர்களால் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “மக்களுக்குச் சேவை செய்வதற்கு நடிகர்களுக்கு அரசியல் அதிகாரம் என்பது அவசியமான ஒன்றல்ல.
ஒரு நடிகராக இருந்துகொண்டே மக்களுக்கான நற்பணிகளைச் செய்ய முடியும்; அதற்கு எதற்காக அரசியலில் நுழைய வேண்டும்?” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
