1461 நாட்கள்.. நிச்சயமாக உங்களை சொர்கத்தில் சந்திக்கிறோம்.. மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உருக்கமான பதிவு..!!

By Priya Ram on மார்ச் 27, 2024

Spread the love

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் டாக்டர் மற்றும் நடிகரான சேதுராமன் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2016-ஆம் ஆண்டு சேதுராமன் உமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மார்ச் மாதம் 26 ஆம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

   

இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேதுராமன் மறைவின் போது அவரது மனைவி உமா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். அதன் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது சேதுராமன் இறந்து 4 வருடங்கள் கடந்த நிலையில் உமா பழைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

   

 

அதில் உமா கூறியதாவது, 1461 நாட்கள் 4 வருடங்கள் ஆகிவிட்டது உடல் அளவில் நீங்கள் பிரிந்தாலும் உங்களது நினைவுகள் எங்களை வழிநடத்துகிறது. வாழ்க்கை குறுகியது என்பதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது. எங்களுடைய கடினமான சமயத்தில் ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு வழிகாட்டி இருக்கிறீர்கள்.

அப்பா எப்போது வருவார் அவரை நாம சர்ப்ரைஸ் செய்யலாம் என சஹானா கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அவளுக்கு அப்பா வரமாட்டார் என்பது தெரியாது. அவளும் நானும் நிச்சயமாக ஒரு நாள் உங்களை சொர்க்கத்தில் சந்திக்கின்றோம். அதுவரை எங்களை வழி நடத்திக் கொண்டே இருங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Uma (@uma.sethuraman)