குணா ரோஷினி போல ஒரே படத்தில் காணாமல் போன காதல் மன்னன் மானு.. காரணம் என்ன..?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பின்னர் அவர் கொடுத்த வெற்றி படங்களில் ஒன்று சரண் இயக்கிய காதல் மன்னன். அந்த படம்தான் அஜித்துக்கு இருந்த சாக்லேட் பாய் இமேஜில் இருந்து அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகக் காட்டியது. அந்த படத்தின் வெற்றிக்கு படத்தின் கதாநாயகி மானுவும் ஒரு காரணம். காதல் மன்னன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததும் மானு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஒரு ரௌண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

   

மானுவின் தாத்தா அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் கோபிநாத் போர்யோலாய் என்பவர்.மானு  படிக்க தான் சென்னைக்கு வந்துள்ளார். அப்போதுதான் இயக்குனர் சரண் கண்ணில் பட்டு பள்ளி படிக்கும் காலத்திலேயே காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.. அந்த படத்தில் நடித்து முடித்ததும் படிப்புதான் முக்கியம் என தோன்றியதால் அதன் பின் அவர் நடிக்கவில்லை.

ஆனால் அவர் அந்த படத்துக்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. நடனத்தில் ஆர்வம் கொண்ட மானுவுக்கு நடிப்பில் ஆர்வமே இல்லையாம். ஆனால் இயக்குனர் சரண் வற்புறுத்தியதால் காதல் மன்னன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் ஹிட்டானாலும் தொடர்ந்து நடிக்கும் ஆசை அவருக்கு வரவேயில்லையாம். அதனால் அதன் பின்னர் சினிமாவில் தலை காட்டாமலேயே காணாமல் போய்விட்டார்.

திருமனம் செய்துகொண்டு செட்டில் ஆன மானு, அதன் பின்னர் 15 ஆண்டுகள் கழித்து என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அதனால் அவருக்கு அதன் பின்னர் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. குணா படத்தில் நடித்த ரோஷினி போலவே மானுவும் ஒரே ஒரு படத்தோடு ஒன் டைம் வொண்டராக காணாமல் போய்விட்டார்.