#image_title
பிரபல நடிகரான சத்யராஜ் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து மக்களை தன்வசம் ஈர்த்தவர். சத்யராஜின் தனித்துவமான நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் சத்யராஜ் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.
வேதம் புதிது, வால்டர் வெற்றிவேல், நண்பன், குங்குமப்பொட்டு, கவுண்டர் சின்னத்தம்பி பெரியதம்பி, அமைதிப்படை, கடலோரக் கவிதைகள், ரிக்சா மாமா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். இவரது மகன் சிபிராஜும் ஹீரோவாக சில படங்களில் நடித்துள்ளார். பாகுபலி திரைப்படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது.
அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளான அம்பிகா அமலா உள்ளிட்டவருடன் இணைந்து சத்யராஜ் நடித்துள்ளார். இந்நிலையில் சத்யராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது நான் ரஜினி சாரோட நினைந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். மிஸ்டர் பாரத் படத்தில் நான் ரஜினி சாருக்கு அப்பாவாக நடித்தேன். அம்பிகா எனக்கு மருமகளாக நடித்தார்.
அதிலிருந்து பத்து நாட்களுக்கு பிறகு மக்கள் என் பக்கம் படத்தில் நானும் அம்பிகாவும் ஜோடியாக நடித்தோம். இதே போல வேதம் புதிது படத்தில் அமலா எனக்கு மருமகளாக நடித்தார் பின்னர் ஜீவா படத்தில் நானும் அமலாவும் டூயட் சாங்கிற்க்கு டான்ஸ் ஆடினோம். என்னை ரசிகர்கள் மன்னித்து விட்ட மாதிரி யாரையும் மன்னிச்சு விட்டுருக்க மாட்டாங்க என பேசியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் களம் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்…
தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…
தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…