Connect with us

CINEMA

விஜய், அஜித் எல்லாம் இல்ல….. நம்ம கட்டப்பாதா பான் இந்தியா ஸ்டார்…. 14 மொழிகளில் சாரு ரொம்ப பிஸி…!!!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஒரு மொழியின் திரைப்படத்தை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அது பிறமொழி பேசும் மக்களிடமும் சென்றடைகின்றது. அப்படிப்பட்ட படத்தை நாம் பான் இந்தியா படங்கள் என்று கூறி வருகிறோம். அதில் நடித்த ஹீரோக்கள் அனைவரையும் பான் இந்தியா ஸ்டார் என்று கூறுவது வழக்கம்.

   

ஜெயிலர் திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் மற்றும் விக்ரம் திரைப்படத்தின் மூலமாக கமலஹாசன் உள்ளிட்டோர் பான் இந்தியா ஸ்டார்களாக மாறிவிட்டார்கள். லியோ திரைப்படம் மூலமாக விஜயின் பான் இந்தியா ஸ்டாராக மாறி இருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் அமிதாபச்சன், ஷாருக்கான், சல்மான்கான், பிரபாஸ், ராம்சரண் போன்றவர்களும் பான் இந்தியா ஸ்டார்களாக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும் டப்பிங் ஸ்டார்கள் என்பது தான் உண்மை. ஏனெனில் பல படங்கள் டப்பிங், மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் உண்மையான பான் இந்தியா ஸ்டார் ஆக வளம் வருபவர் நடிகர் சத்யராஜ் தான். சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியவர்.

தற்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார் . அதிலும் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் இன்றளவும் புகழின் உச்சியில் வைத்திருக்கின்றது. இந்த திரைப்படத்தின் மூலமாக அவரது புகழ் இந்தியா முழுவதும் பரவி இருக்கின்றது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் பல மொழி வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக இருக்கும் இவர் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்டு மொபைல் டப்பிங் வாகனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்து அங்கேயே டப்பிங் பேசிக் கொடுத்து இருக்கிறார். அந்த விளம்பரம் ஏழு அல்லது 14 மொழிகளில் வெளியாக உள்ளதாம் சினிமாவில் மட்டும் இன்றி விளம்பரத்திலும் பயன் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார் சத்யராஜ்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top