நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குநராக களம் இறங்கும் சசிக்குமார்.. இந்த பிரபல நடிகரின் மகன் தான் ஹீரோவா..?

By admin on மார்கழி 9, 2023

Spread the love

நடிகர் சசிக்குமார், இயக்குநராக தான் தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகமாக ஆசைப்பட்டார். பிறகு அவர் முதன்முதலில் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் அந்த முக்கியமான கேரக்டரில் நடிக்க சரியான நடிகர் கிடைக்காத சூழலில், அந்த படத்தில் பரமன் கேரக்டரில் சசிக்குமாரே நடித்தார் என்பதுதான் உண்மை. ஆனால், சுப்ரமணியபுரம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதில் ஜெய் பிரதான கேரக்டரில் நடித்திருந்தார். சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் பேசப்பட்ட படமாக இது சசிக்குமாருக்கு அமைந்தது.

Sasikumar

Sasikumar

அதன்பிறகு அவர் டைரக்ட் செய்த ஈசன் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இயக்குநராக ஆசைப்பட்ட சசிக்குமாருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. சுந்தரபாண்டியன், கெடாரி, குட்டிப்புலி, பேட்ட, தாரை தப்பட்டை சமீபத்தில் வெளியான அயோத்தி வரை பல படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் பெரிய அளவில் சசிக்குமாருக்கு பேசப்பட்ட வெற்றிப்படங்களாகவும் அமைந்தன. ஆனால் நீண்ட காலமாக அவர் படங்களை இயக்காதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஏனெனில் இயக்குநர் பாலா, அமீர், சமுத்திரக்கனி போன்ற ஜாம்பவான்களிடம் உதவி இயக்குநராக பணிசெய்தவர் சசிக்குமார்.

   
   
Sasikumar

Sasikumar

 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் டைரக்டராகிறார் சசிக்குமார். நடிகர் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ஒரு வெப் சீரிஸ்சை சசிக்குமார் டைரக்ட் செய்ய உள்ளார். 20 எபிசோடுகளாக இது வெளியாக உள்ளது. இது வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பிரிட்டிஷ் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இந்த வெப்சீரிஸ் குறித்த ப்ரீ புரடொக்சன் பணிகள் ஆறேழு மாதங்களாக நடந்து வருகிறது.

Shanmuga Pandian

Shanmuga Pandian

விரைவில் இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது. வேல ராமமூர்த்தியின் கதையை குற்றப்பரம்பரை என்ற படத்தை தனது கனவு படமாக எடுக்க நினைத்தவர் பாரதிராஜா. ஆனால் அந்த கதை தன்னுடையது என ரத்னக்குமாருக்கும், வேல ராமமூர்த்திக்கும் இடையே பஞ்சாயத்து ஏற்பட்டு கோர்ட்டுக்கு போனதால், அந்த படத்தை எடுக்க முடியவில்லை. இப்போது அதே கதையை மையப்படுத்தி சசிக்குமார் வெப்சீரிஸ் ஆக இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.