விஜய் மக்கள் இயக்கம்: இதுக்கு இந்த வேலையை செய்யாமலே இருந்திருக்கலாம்.. வீடியோவை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!

By Nanthini on மார்கழி 9, 2023

Spread the love

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தினரை புயலால் பாதிக்கப்பட்டுருக்கு உதவுங்கள் என்று உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் பலரும் ஆங்காங்கே மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். வீடியோக்கள் போடாமல் பல விஜய் ரசிகர்கள் தொண்டு செய்து வருகின்றனர். அதேசமயம் மக்கள் இயக்க போஸ்டரை தூக்கிக்கொண்டு தொண்டர்கள் பலரும் உதவி செய்த நிலையில் அது விமர்சனத்திற்கு உள்ளானது.

   

அதையெல்லாம் ஓரம் கட்டி தற்போது புஸ்ஸி ஆனந்த் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தானும் மக்களுக்கு உதவி செய்வதாக கூறி அவர் களத்தில் இறங்கிய நிலையில் ஏற்கனவே சாலையோரம் உள்ள குப்பை தொட்டி அருகே குப்பைகள் இருந்துள்ளன. அதை அள்ளி மீண்டும் அதே இடத்தில் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள். இருந்தாலும் களத்தில் இறங்கி அவர் வேலை செய்தாலும் குறை சொல்றீங்களே என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.