Categories: சினிமா

சுப்பிரமணியபுரம் படத்தை பார்த்துவிட்டு தான் இந்தப் படத்தையே எடுத்தேன்.. பிரபல பாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களான பாலா மற்றும் அமீர் ஆகியோரின் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சசிகுமார். இவர் தயாரித்து இயக்கிய சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே இந்திய அளவில் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக பல திரைப்படங்கள் இயக்கி சாதனை படைத்தார்.

அது மட்டுமல்லாமல் கதாநாயகனாக களம் இறங்கிய இவர் ஈசன் என்ற படத்தை இயக்கி வரவேற்பை பெற்றார். கதாநாயகனாக பல திரைப்படங்களில் சசிகுமார் நடித்து வந்தார். அதன்படி நாடோடிகள், சுந்தர பாண்டியன், குட்டி புலி, கிடாரி மற்றும் உடன்பிறப்பே உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்று சசிகுமார் பிரபல ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழ்ந்தார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சசிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யாப் பற்றி பேசியுள்ளார். முதலில் இவரைப் பற்றி எதுவும் தெரியாது எனவும் தன் நண்பன் ஒருமுறை கூறியபோதும் அதைப்பற்றி கேட்க விரும்பாத இவர் ஒரு நாள் அவரின் படத்தை ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டிருக்கும்போது இவரா அவர் என்று வியப்புடன் பார்த்தேன்.   ஒரு நாள் அவரை சந்திக்கும் போது சுப்பிரமணியம் திரைப்படத்தின் கேசட்டை கேட்டு வாங்கியதாகவும் அந்தப் படத்தை பார்த்த பிறகு தான் gangs of wazipur என்ற வெப் சீரிஸ் எடுத்ததாகவும் கூறினார். சுப்பிரமணியம் திரைப்படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு அவர் என்னை கட்டி தழுவினார். அது மட்டுமல்லாமல் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் போது reference என்ற இடத்தில் சுப்பிரமணியபுரம் என்பதையும் இயக்குனர் குறிப்பிட்டு குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

7 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

7 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

8 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

8 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

8 மணத்தியாலங்கள் ago