விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 18 பேர் வீட்டுக்குள் நுழைய அடுத்ததாக வைல்டு கார்டு என்றி மூலமாக 5 பேர் வீட்டுக்குள் சென்றனர். இவர்களில் இதுவரை பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்ன பாரதி, கானா பாலா, ஐசு மற்றும் ஆர் ஜே ப்ராவோ உள்ளிட்டோர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டன.
அதேசமயம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா வெளியேற்றப்பட்டார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது முதலில் ஆக்டிவாக இருந்த நிலையில் அதன் பிறகு சாப்பிடுவது, தூங்குவது மற்றும் வலிக்கு இடுவது போன்ற வேலைகளை தான் செய்து வந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பும் குறைய தொடங்கிய நிலையில் கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்ற இவர் எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 63 நாட்கள் இருந்த இவர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய மகளை வரவேற்பதற்காக வனிதா விமான நிலையத்திற்கு சென்று இருந்தார். அங்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய மகளை பார்த்த முதல் தருணத்தை வீடியோவாக வனிதா பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…