actor santhanam

பரீட்சை எழுத போகும்போது கூட அந்த நடிகை போட்டோவை எடுத்துட்டு போனேன்… – நடிகர் சந்தானம் சொன்னதை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மாசி 13, 2026

Spread the love

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது, சின்ன வயசுல ரொம்ப நாளா நான் சினிமாவில் வர்ற கேஆர் விஜயா தான் உண்மையான அம்மன் என்று நினைச்சுட்டு இருந்தேன். நான் பரீட்சை எழுதும் போது கூட கேஆர் விஜயா போட்டோவை தான் பரீட்சை அட்டையில் ஒட்டீட்டு போவேன்.

ஒரு பாயிண்டுக்கு அப்புறம்தான் இவங்க எல்லாம் நடிகை. அம்மன் சாமி எல்லாம் கிடையாதுன்னு புரிஞ்சுது. ஆனா இன்னைக்கு நான் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் போட்டோ எடுத்து என் பையன் கிட்ட காட்டி, இவங்க தான் அம்மன் என்று சொன்னால் அவன் ஏத்துப்பானா? அன்னைக்கு நம்ம இருந்த காலம் வேற. இப்ப பசங்க இருக்கிற காலம் வேற என்று நடிகர் சந்தானம் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.