என்னோட முதல் சினிமா ஃபிரண்ட் சிம்பு தான்.. அவர் நடிச்ச படத்துல நான் தான் நடிச்சிருக்கணும்.. ஆர்.ஜே பாலாஜி ஓபன் டாக்..!

By Nanthini on பங்குனி 24, 2025

Spread the love

ஆர் ஜே வாக இருந்த பாலாஜி சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். நானும் ரௌடி தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இதனை தொடர்ந்து எல்கேஜி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நிலையில் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இதனை தொடர்ந்து கேரக்டர் நூல்களை விட ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அடுத்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் RJ பாலாஜியின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?..இதோ பாருங்க

   

இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னோட முதல் சினிமா பிரிண்ட் சிம்பு தான். சிம்பு மற்றும் அனிருத் இருவருமே எனக்கு ரொம்ப க்ளோஸ். அனிருத் எனக்கு ஒரு தம்பி மாதிரி. அவர் பாடிய வைதீஸ் கொலவெறி பாட்டு முதன்முதலாக என்னுடைய ஷோ மூலமாக தான் launch பண்ணோம். அன்னையிலிருந்து அனிருத் எனக்கு ஒரு தம்பி மாதிரி. எங்களுக்குள்ள ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு.

   

சிம்பு, ஆர்ஜே பாலாஜியால் நொந்து போன ப்ரொடியூசர்.. பெருமைக்கு குதிரை ஓட்டின  கதை தான் - Cinemapettai

 

அதனைப் போலவே நான் ஆர் ஜே வாக இருக்கும்போது சிம்பு போன் பண்ணி நான் சிம்பு பேசுறேன் என்று சொல்வாரு. யாரோ கலாய்க்கிறாங்க என்று நினைத்து விட்டு நான் தங்கர்பச்சான் பேசுறேன் சொல்லுங்க என்று சொல்லுவேன். இல்ல நான் உண்மையிலேயே சிம்பு தான் பேசுறேன் என்று சொல்லுவாரு. நான் நம்பவே மாட்டேன். கடைசில பாத்தா அது சிம்பு தான். சினிமாவில் இருந்து அவர் பேசி என்ன அவருக்கு ரொம்ப பிடிக்கும். எல் கே ஜி திரைப்படம் முடித்த கையோட எனக்கு போன் பண்ணி சூப்பரா பண்ணி இருக்கீங்க என்று பாராட்டுனாரு.

சொர்க்கவாசல் பாலாஜியின் சினிமா வாழ்க்கையில் புதிய மைல் கல்..இசையமைப்பாளர்  அனிருத் உரை | Tamil Cinema News

அதன் பிறகு அவரிடம் பேசவே இல்லை. சந்தானத்தை நான் தான் சினிமாவுக்கு கொண்டு வந்த உங்களையும் நான் தான் சினிமாவுக்கு கொண்டு வருவேன் என்று சொல்வாரு. அதற்காக அவர் நடிச்ச ஒரு படத்துல ஒரு கேரக்டரில் என்ன நடிக்க வைக்க ட்ரை பண்ணாரு. ஆனால் டைரக்டருக்கு அதுல விருப்பம் இல்லாததால் அந்த படத்துல நடிக்க முடியாமல் போய்விட்டது என ஆர்.ஜே பாலாஜி பேசியுள்ளார்.