மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் இரும்பு மனுஷி என்று பல அரசியல் தலைவர்களால் போற்றப்பட்டவர். அரசியல் என்பதையும் தாண்டி அவருடைய இளமை காலங்களை திரும்பிப் பார்த்தால் ஜெயலலிதா ஒரு சிறந்த நடிகை என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார். ஜெயலலிதா அரசியலுக்குள் வந்தது எப்படி என்றால் தனக்கு விருப்பமில்லாமல் நடந்த ஒன்று என்றுதான் சொல்வார். அதனைப் போலத்தான் அவர் சினிமாவுக்குள் வந்ததும். நன்றாக படிக்கக்கூடிய மாணவி படிப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாய் நடிகை சந்தியாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்குள் வந்தவர் தான் ஜெயலலிதா.

மிகவும் சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்ததால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை நடிகர்களும் அவரை விட வயதில் மூத்தவர்களாக தான் இருந்தனர். 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை என்ற திரைப்படம் மூலமாகத்தான் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து பல முன்னனி நடிகர்களுடன் நடித்த இவர் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தினர். இதனிடையே ஜெயலலிதா நடிகையாக இருந்த காலகட்டத்தில் அவரிடம் பத்திரிகையாளர்கள் காதல் குறித்து கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு ஜெயலலிதா காதல் குறித்து பேசுவதற்கே பயமாக உள்ளது, சமீபகாலமாக என்னைப் பற்றி காதல் குறித்த செய்திகளை பத்திரிகைகளில் தாறுமாறாக எழுதியுள்ளனர். அதற்கு ஒரு காரணமும் உள்ளது. நான் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த போது பத்திரிக்கையாளர் நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என்று கேட்டார். நான் பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் வீரர் பண்டோடியை காதலித்தேன்.

ஆனால் அது அவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நான் காதலித்தேன் என அந்த பத்திரிக்கை நிபுணருக்கு பதில் அளித்தேன். ஆனால் அந்த காதலை நான் சொல்லிய பிறகுதான் என்னைப் பற்றி பத்திரிகைகளில் தாறுமாறாக செய்திகள் வெளிவர ஆரம்பித்தது. அதன் பிறகு காதலைப் பற்றி பேசுவதற்கே எனக்கு பயமாக உள்ளது என ஒரு பத்திரிக்கை பேட்டியில் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
