நடிகர் ரெடின் கிங்ஸ்லி முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார். அவரது வித்தியாசமான பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு 46 வயது ஆகிறது. கடந்த வருடம் நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ரெடின் கிங்ஸ்லி தனது மனைவியுடன் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நான் இவங்கதான் மனைவி பிக்ஸ் பண்ணிட்டேன். கல்யாணம் தள்ளி போய்கிட்டு இருந்துச்சு. இவங்க என்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டப்போ ஷூட்டிங்கில் ரொம்ப பிசியா இருந்தேன்.
மைசூர்ல ஷூட்டிங் நடக்குது நீங்க வேணா ஷூட்டிங் வாங்க. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னு கேட்டேன். நவம்பர்ல கல்யாணம் பண்ணலாம்னு யோசிச்சு சாரி மட்டும் எடுத்து கொடுத்துட்டு நான் ஷூட்டிங் போயிட்டேன். கல்யாணம் நடக்குமான கடைசி வரைக்கும் அவங்களுக்கு டவுட்டு தான் இருந்துச்சு.
கல்யாணத்துக்கு முந்தின நாள் ஷூட்டிங் முடிச்சு ஒரு மணிக்கு தான் வந்தேன். என் மனைவி ஸ்ட்ரெயிட் பார்வேர்ட். சண்டை போடுறது, கலகலன்னு பேசுறது எல்லாமே பிடிக்கும். எதுவா இருந்தாலும் ஓபனா பேசிருவாங்க. சண்டை போட்டாலும் சொல்லிடுவாங்க. எனக்கு இவங்க தான் கரெக்டான ஆளு என கூறியுள்ளார்.