வாயால் அசிங்கப்பட்ட ஜெமினி கணேசன்… AVM காலில் விழுந்த சோகம்…

By Meena on செப்டம்பர் 19, 2024

Spread the love

ஜெமினிகணேசன் தமிழகத்தின் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் இவர் பணியாற்றி புகழ் பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

   

ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டுடியோவில் புது முகங்களை தேர்வு செய்யும் கேஸ்டிங் டைரக்டராக பணியாற்றினார். 1947 ஆம் ஆண்டு மிஸ் மாலினி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெமினி கணேசன். பிறகு 1952 இல் வெளியான தாய் உள்ளம், வல்லவனுக்கு வல்லவன் ஆகியா இரண்டு திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் ஜெமினி கணேசன்.

   

அதற்குப் பிறகு 1953 ஆம் ஆண்டு பெண் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெமினி கணேசன். மனம் போல் மாங்கல்யம் திரைப்படத்தில் இரட்டை வேடத்திலும் நான் அவன் இல்லை திரைப்படத்தில் 9 தோற்றங்களிலும் ஜெமினி கணேசன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். பிறகு தமிழ் சினிமாவில் ஏறு முகத்தையே கண்ட ஜெமினி கணேசன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 

காதல் சம்பந்தமான திரைப்படங்களில் அதிகமாக இவர் நடித்திருந்ததால் இவரை காதல் மன்னன் என்று மக்கள் அழைத்தனர். தென்னிந்திய மொழிகளில் மொத்தமாக 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் ஜெமினி கணேசன். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய மூவரையும் அந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் என்று அழைத்தனர். அந்தளவுக்கு பிரபலமாக இருந்தார் ஜெமினி கணேசன்.

ரம்பத்தில் AVM தயாரித்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜெமினி கணேசன் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் தான் கமலஹாசன் ஐந்து வயது குழந்தையாக அறிமுகமானார். அப்பொழுது கமல்ஹாசனை பற்றியும் இந்த படத்தை பற்றியும் சூட்டிங் நடக்கும்போது கேலி கிண்டல் செய்து கொண்டிருப்பாராம் ஜெமினி கணேசன். ஆனால் அவர் எதிர்பாரா விதமாக களத்தூர் கணமா மாபெரும் ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றி விழாவில் AVM ஐந்து வயது குழந்தையான கமலஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுத்தது இவருக்கு பிடிக்கவில்லை.

அதனால் அதிலிருந்து வெளியேறிய ஜெமினி கணேசன் AVM புரொடக்ஷனில் நடிக்க கூடாது என்று நினைத்திருந்தாராம். ஆனால் பிற ப்ரொடக்ஷன் தயாரிப்புகளில் அவர் நடித்த படங்கள் எதுவுமே டவில்லை. பிறகு தனது வாயினால் அவமானப்பட்ட AVMக்கே திரும்ப சென்று சரணடைந்தாராம் ஜெமினி கணேசன். அதற்கு பிறகு AVM தயாரிப்பில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் ஜெமினி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.