வாழையின் நிஜ விபத்தில் கால்களை இழந்த பெண்.. மாரி செல்வராஜ் செய்த பெரிய உதவி.. குவியும் பாராட்டுகள்..!!

By admin on புரட்டாதி 19, 2024

Spread the love

மாரி செல்வராஜ் கர்ணன், மாமன்னன், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மக்களிடையே பிரபலமானவர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி வாழை படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. தனது சிறுவயதில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்ததாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.

   

மேலும் வாழை படத்தில் இடம்பெற்றுள்ள வேம்பு கதாபாத்திரம் சிறுவயதில் வாழைத்தார் சுமக்கும் வேலைக்கு சென்று விபத்தில் இறந்தது தனது அக்காவின் கதாபாத்திரம் என கூறியிருந்தார். வாழ்க்கையில் மிகப்பெரிய கண்ணீர் தான் இந்த படம் என மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருந்தார். மக்களின் வாழ்வியலை சார்ந்து எடுக்கப்பட்ட வாழை திரைப்படம் பல கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

   

mari selvaraj new movie title vaazahi

 

அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் வாழை திரைப்படத்தை பாராட்டினர். இந்த திரைப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். வாழைத்தார் ஏற்றி சென்ற லாரியில் கூலி தொழிலாளர்கள் பயணம் செய்தனர். அப்போது லாரி கவிழ்ந்து 19 பேர் உயிரிழந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Mari Selvaraj next film Vaazhai movie first single in santhosh narayanan  musical is out now | Vaazhai First Single : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை'  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ...

இந்த சம்பவம் 1999-ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த விபத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி என பணிமய மாதா என்ற பெண்ணுக்கு இயக்குனர் மாறி செல்வராஜ் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.

#image_title