வெறும் காமெடி நடிகர் மட்டுமல்ல.. ரெடின் கிங்ஸ்லி இவ்வளவு பெரிய தொழிலதிபரா?.. தினமும் லட்ச கணக்கில் கொட்டும் வருமானம்..!!

By Nanthini on மார்கழி 13, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று காமெடி நடிகராக கலக்கும் ரெடின் கிங்ஸ்லி படங்களில் வெறும் காமெடி நடிகர் மட்டுமல்ல அதற்கு முன்பு பிசினஸ்மேன் ஆக இருந்துள்ளார். ஸ்பெல்போன் என்ற மிகப்பெரிய ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை இவர் வைத்துள்ளார். அதாவது பொருட்காட்சி மற்றும் கண்காட்சிகளில் இடம்பெறும் பெரிய ஜெயன்ட் வீல்ஸ் மற்றும் கிட்ஸ் விளையாடும் செட் அப்புகள் என எல்லாமே பண்றது இவரோட கம்பெனி தான்.

   

அது மட்டுமல்லாமல் அரசு நடத்தும் அனைத்து பொருட்காட்சிகளையும் இவரின் கம்பெனி தான் நடத்திக் கொடுக்கும். குறிப்பாக பெசன்ட் நகர் பீச்சில் நடைபெறும் கண்காட்சி மற்றும் பொருட்காட்சியை நடத்துவதை இவருடைய கம்பெனி தான். ரெடின் கிங்ஸ்லி முதலில் ஒரு டான்ஸராக தான் சினிமாவில் நுழைந்தார். அஜித்தின் அவள் வருவாளா படத்தில் இடம்பெறும் ருக்கு ருக்கு ருக்குமணி என்ற பாடலில் இவர் குரூப் டான்ஸ்ர்களில் ஒருவராக நடனமாடி இருப்பார்.

   

 

இவர் ஸ்பெல் போன் டான்ஸ் கம்பெனி மற்றும் ஸ்கூல் என ஆரம்பித்து தன்னுடைய வட்டாரத்தை விரிவாக்கினார். பல வருடங்களாக இந்த பிசினஸில் இருந்து வருகிறார். திருமண பந்தத்தில் உடன்பாடு இல்லாமல் இருந்ததால் 46 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர் சமீபத்தில் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.