#image_title
இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக வலம் வருகிறார் எஸ் ஜே சூர்யா. அவர் வில்லனாக நடித்த மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் அவரின் மிரட்டலான நடிப்புக்காகவே பாராட்டப்பட்டன. இதையடுத்து இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு வந்த எஸ் ஜே சூர்யா முதலில் பாரதிராஜா மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அஜித் ஆசை படத்தில் நடிக்கும் அதில் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்துவிட்டு அவருக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.
SJ Suryah directing kushi movie
இயக்குனர் ஆவதற்கு முன்பு எஸ் ஜே சூர்யா பாரதிராஜா, ஜி எம் குமார், வசந்த் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். அதன் பின்னர் வாலி படத்தை இயக்கி அஜித்துக்கு ஒரு சூப்பர் ஹிட்டைக் கொடுத்தார். அந்த படம் அவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படம் முடிந்ததுமே விஜய்யை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த படம் ஹிட்டானதால் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்தார்.
இதையடுத்து அவர் இயக்கிய நியூ படத்தில் தானே நடிக்க வேண்டும் எனமுடிவு செய்து அனைவரிடம் சொல்லியுள்ளார். அப்போது தங்களின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பது சம்மந்தமாக அவரின் அப்போதைய உதவி இயக்குனரும், தற்போது நடிகராக இருப்பவருமான ரவி மரியா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
SJ suryah
அதில் “அவர் வந்து எங்களிடம் ஹீரோவாக ஆகவேண்டுமென சொன்னபோது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஏனென்றால் நியூ படக்கதை ஒரு ஹீரோ பண்ணவேண்டிய கதை இல்லை. அது ஒரு புதுமுகம் பண்ணினால்தான் நல்லா இருக்கும். அதனால் நாங்கள் எல்லோரும் அதற்கு சம்மதம் சொன்னோம். நாங்கள் நினைத்தது போலவே தெலுங்கில் அந்த படம் மகேஷ்பாபு நடித்ததால் ஓடவில்லை. ஆனால் தமிழில் சூப்பர் ஹிட்” எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…