#image_title
கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. மாமு வேற மாதிரி ஆகிப்போகும் என பிரவுன் கலர் பாப் கட்டிங் கெட்டப்பில் உதட்டை குவித்து குவித்து பேசிய அவரை, முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு பிடித்துப் போய்விட்டது. தொடர்ந்து டாக்டர், ஜெயிலர் படங்களில் நடித்த அவர், கங்குவா படத்திலும் நடித்திருக்கிறார். கடந்த இரு தினங்களாக ரெடின் கிங்ஸ்லி சமூக வலைதளங்களில் அனலாக வைரலாகி வருகிறார். அதற்கு காரணம், 46 வயதான அவர் செய்துக்கொண்ட திடீர் திருமணம்தான். அதுவும் பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து அவர் திருமணம் செய்திருக்கிறார்.
#image_title
இதுகுறித்து சமீபத்திய நேர்காணலில், நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, ரெடின் கிங்ஸ்லி தூத்துக்குடியை சேர்ந்தவர். நானும் தூத்துக்குடியை சேர்ந்தவன் என்பதால் எனக்கும், அவருக்கும் நல்ல பழக்கமுண்டு. ஆனால் அவருக்கு வயது 46 என்பது எனக்கு தெரியாது. திடீரென அவர் திருமணம் செய்துக்கொண்ட தகவல் எனக்கு ஆச்சரியமளித்தது. அவரை போனில் அழைத்து வாழ்த்துகள் சொன்னேன். அப்போது அவரது திடீர் திருமணம் குறித்து ரெடின் கிங்ஸ்லியே என்னிடம் சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.
#image_title
அண்ணே, கல்யாணம் பண்ணிக்க பண்ணிக்கன்னு இந்த பொண்ணு ஓவர் டார்ச்சர் பண்ணுச்சுண்ணே. அதான் அவசரமாக கல்யாணம் நடந்துடுச்சு. மைசூருல கவின் ஹீரோவா நடிக்கற படத்துல நானும் நடிக்கிறேன். 20 நாள் ஷூட்டிங். 10 நாள் நடிச்சுட்டேன். இன்னும் 10 நாள் ஷூட்டிங் இருக்கு. ஷூட்டிங் நடுவுல தான், சாமுண்டி கோவில்ல வெச்சு ரெண்டு பேரும் ரொம்ப சிம்பிளா கல்யாணம் பண்ணிகிட்டோம் என்று என்னிடம் ரெடின் கிங்ஸ்லி கூறினார். மற்றவர்கள் சொல்வது போல இது ரெண்டாவது திருமணம் கிடையாது. ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா இருவருக்குமே இதுதான் முதல் திருமணம். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்த நிலையில் திருமணம் செய்துள்ளனர் என்று அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ…