#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்பொழுது இவர் தமிழில் தனது 50 வது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘D50’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வடசென்னை 2’, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதை தொடர்ந்து இந்தியில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில்‘தேரே இஷ்க் மெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது. தற்பொழுது தனுஷ் தமிழில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டதும், இவர்களுக்கு 2 மகன்கள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்கள் தற்பொழுது தங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 2022ல் தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இதுவரை இருவரும் கூறவில்லை. இந்த பிரிவிற்கு பின் இருவரும் அவரவர் வேளைகளில் பிசியாகிவிட்டனர்.
#image_title
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 73-வது பிறந்தநாள். மனைவியை விட்டு பிரிந்தாலும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தனது முன்னாள் மாமனார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதை மட்டும் விடவில்லை நடிகர் தனுஷ். அதுவும் எப்படி சொல்லி இருக்காரு தெரியுமா? ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா’ என மிகவும் மகிழ்ச்சியோடு கூறி பதிவு வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘என்ன தான் சண்டை இருந்தாலும் பாசம் மட்டும் குறையவே இல்லை’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த பதிவு..
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…