எங்கள் திருமண வாழ்க்கைப் பிரியக் காரணமே ஜோதிடம்தான்… நடிகை நளினி பகிர்ந்த தகவல்!

By vinoth on மார்ச் 9, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நளினி. தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த அவர் தான் பணியாற்றிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராமராஜனை திருமணம் செய்துகொண்டார்.

முதலில் இவர்கள் திருமணத்துக்கு நளினி வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லையாம். அதனால் ஓடிப்போய்தான் அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் ராமராஜன் மேல் தனக்கு எப்படிக் காதல் பிறந்தது என்பதைக் கூறியுள்ளார்.

   

அதில் “அவர் என் மேல் ஒருதலைக் காதலில் இருந்தார். அந்த விஷயம் எங்கள் வீட்டில் தெரிந்தபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்ததை தெரிந்துகொண்டு அவரை அழைத்துச்சென்று அடித்து விட்டார்கள். இதைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நமக்காக ஒருவர் அடிவாங்கி இருக்கிறாரே. அவர்களை எல்லாம் நாம் பழிவாங்க வேண்டும். இவரைதான் நான் திருமணம் செய்யவேண்டும் என்று வைராக்கியம் எடுத்துக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

   

இப்படி ஒன்று சேர்ந்த அவர்களின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் பிரிந்தது. அதன் பின்னர் ராமராஜனும் நளினியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருமே மறுமணம் செய்துகொள்ளவில்லை. அதே போல தங்கள் குழந்தைகளின் திருமணத்தை இருவரும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.

 

இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் நளினி தங்கள் திருமண வாழ்க்கை ஏன் பிரிந்தது எனக் கூறியுள்ளார். அதில் “எங்கள் திருமண வாழ்வு முடிய ஜோதிடம்தான் காரணம். என் கணவருக்கு ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை உண்டு. அவருக்கே ஜோதிடம் பார்க்க தெரியும். அவர் திருமணம் ஆனக் கொஞ்ச நாளிலேயே ‘நாம் சீக்கிரம் பிரிந்துவிடுவோம்” எனக் கூறிக்கொண்டே இருப்பார்.

திருமணம் ஆன நான்காவது ஆண்டிலேயே இப்படி சொல்ல ஆரம்பித்தார். ஆனால் நாங்கள் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து அதன் பின்னர்தான் பிரிந்தோம்” எனக் கூறியுள்ளார்.