Categories: சினிமா

கலைஞர் கிட்ட அன்னைக்கு சொன்ன வார்த்தை.. இன்று வரை குற்ற உணர்ச்சியில் இருக்கும் ரஜினி.. அப்படி என்ன நடந்தது..?

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. சூப்பர் ஸ்டார் என்று ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ரஜினி தனக்கு வயசானாலும் நடிப்பில் குறை வைக்காமல் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினி சினிமாவில் பிஸியான நடிகராக நடித்து வருகின்றார். இந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ரஜினியின் ஒரு படத்திற்கு வசனம் எழுத தயாராகிய போது ரஜினியால் அதனை கலைஞர் மறுத்துள்ளார்.

அதாவது 1980 ஆம் ஆண்டு ரஜினி ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் தயாரிப்பாளருக்கு திருப்தி தரவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரஜினியிடம் சென்று, நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை சொல்கிறேன், நம் படத்திற்கு கலைஞர் அவர்கள் வசனம் எழுத ஒப்புக்கொண்டார் என்று மகிழ்ச்சியுடன் கூறிய நிலையில் அதை கேட்டதும் ரஜினிக்கு தூக்கி வாரி போட்டுள்ளது. எளிமையான தமிழ் வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நாம் கலைஞரின் வசனங்களை எப்படி பேசி நடிக்க முடியும் என்று யோசித்துள்ளார். பிறகு கலைஞரை நேரில் சந்தித்து இந்த விஷயத்தை கூற ரஜினி சென்றுள்ளார்.

அங்கு சென்று அவரிடம் இந்த விஷயத்தை கூறி ரஜினி அமைதியாக அமர்ந்து கொண்டிருந்த நிலையில் ரஜினியின் தர்ம சங்கடத்தை புரிந்து கொண்ட கலைஞர் தயாரிப்பாளரிடம் எனக்கு வேறு வேலைகள் இருப்பதால் என்னால் இந்த படத்திற்கு வசனம் எழுத முடியாது என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரின் மனதையும் துன்புறுத்தாமல் ரஜினியையும் திருப்திப்படுத்தும் வகையில் கலைஞர் அந்த செயலை செய்துள்ளார். ஆனால் கலைஞரின் வசனங்களை பேசி நடித்து இருக்கலாமோ, தவறு செய்துவிட்டோமோ என்று இன்றும் ரஜினிக்கு குற்ற உணர்ச்சி உள்ளது.

Nanthini

Recent Posts

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

46 seconds ago

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

11 minutes ago

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

21 minutes ago

‘இனி சும்மா விடமாட்டோம்’… சவுதிக்கு ஏமன் ஹவுதிகள் விடுத்த பகீர் வார்னிங்… வான்வெளியில் நடந்த நடுக்கடல் பரபரப்பு…!

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…

31 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் விசித்திரம்.. உயிருடன் பாம்பை விழுங்கும் ஒட்டகங்கள்…! அரபு நாடுகளின் பகீர் பின்னணி…!

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…

41 minutes ago

ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு ‘அரசு வழக்கறிஞர்’ பதவி… திருப்பத்தூரில் வெடித்த நிஜ ‘சதுரங்க வேட்டை’…!

திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…

41 minutes ago