#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. பழம்பெரும் மூத்த நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகன்தான் சூர்யா. இவரது சகோதரர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சூர்யா.
2002 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்தது அவருக்கு திருப்புமுனையாக இருந்தது. தொடர்ந்து காக்க காக்க பிதாமகன் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களுள் ஒருவராக ஆனார் சூர்யா. தொடர்ந்து சில்லுனு ஒரு காதல், வேல், சிங்கம் படத் தொடர் ஜெய்பீம் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார் சூர்யா.
தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ஒரு வரலாற்று படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவின் கெட்டப் மிகவும் பிரம்மாண்டமாக இருப்பது போல் தான் தெரிகிறது. இந்நிலையில் கங்குவா திரைப்படம் பான் இந்தியா மூவியாக இந்தியா முழுவதும் பலமொழிகளில் வெளியாக இருப்பதனால் இந்தியா முழுவதும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் சூர்யா.
கங்குவா பட ப்ரமோஷனுக்காக சூர்யா ஒரு நேர்காணலில் மும்பையில் தான் செட்டில் ஆன காரணம் ஏன் என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் ஜோதிகா மும்பையில் பிறந்து வளர்ந்தவங்க. 18 வருஷம் மும்பையில் இருந்தாங்க. அதுக்கு பிறகு நடிப்பு கல்யாணம் அப்படி என்று சென்னைக்கு வந்து என்னோட ஃபேமிலிக்காக 27 வருஷமா சென்னையில தான் இருந்தாங்க.
இப்போ அவங்களுக்காக நான் ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். இதுவே லேட்டு தான் எனக்கு தெரியும் அவங்க சந்தோஷத்துக்காக நான் ஏதாவது பண்ணனும் விரும்பினேன். ஒரு ஆணுக்கு என்ன விருப்பமோ தேவையோ அதே மாதிரி தான் பொண்ணுக்கும் இருக்கும். அது அவங்களுக்கு கிடைக்கணும். அதனால தான் அவங்களோட ஹேப்பினஸ் ஃப்ரீடம்க்காக நான் மும்பையில் வந்து செட்டில் ஆகி இருக்கேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் சூர்யா.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…