யாராலும் வெல்ல இயலாத ஆக்கபூர்வமான அரசியலை உருவாக்குவோம்… தொண்டர்களுக்கு விஜய் எழுதிய நன்றி கடிதம்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புகழ்பெற்ற நடிகர் ஆக இருந்தபோதிலும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினார். மக்களுக்கு பணியாற்ற விரும்பி அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்தார்.

அதன்படி தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை அறிவித்து கட்சியின் கொடியையும் பாடலையும் வெளியிட்டார். நேற்றைய முன்தினம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் விஜயை தேடி வந்தனர்.

கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்காக விக்கிரவாண்டியில் கூடினர். 20 கிலோமீட்டர் தொலைவிற்கு விக்கிரவாண்டி சாலையே ஸ்தம்பித்தது என்று கூறலாம். அந்த அளவுக்கு ஏற்பாடுடன் வெற்றிகரமாக த வெ க கட்சியின் மாநில மாநாடு நடந்து முடிந்தது.

இந்நிலையில் விஜய் கட்சித் தொண்டர்களுக்காகவும் நல்ல முறையில் நடத்திக் கொடுத்த நிர்வாகிகளுக்காகவும் நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். விஜய் நன்றி கடிதத்தில் எல்லோரையும் ஒவ்வொருவராக கைபிடித்து நன்றி கூற வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். எல்லோரும் கொடுத்த அன்பினால் நான் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன். சொல்வதற்கு வார்த்தையே இல்லை எனக்காக வெகு தூரம் தொலைவு பயணம் செய்து மாநாட்டுக்கு வந்த தோழர்களுக்கும் தோழிகளுக்கும் வீட்டிலிருந்து எனக்கு ஆதரவளித்த தாய்மார்களுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்று கூறியிருக்கிறார்.

உங்களது பேரன்பையும் கைத்தட்டல்ளையும் ஆர்ப்பரிப்பையும் கண்டு நான் மணமகிழ்ந்து போனேன். அனைவரும் இணைந்து இனி நம் அரசியலை சரித்திரத்தில் இடம் பிடிக்க செய்வோம். ஆக்கபூர்வமான யாராலும் வெல்ல முடியாத அரசியலை உருவாக்குவோம். இனி தான் அதிக விமர்சனங்களை சந்திக்க போகிறோம். அதை எல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் வெற்றிக்காக போராடுவோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் விஜய்.

admin

Recent Posts

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

2 minutes ago

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

15 minutes ago

“நேரம் மிச்சமாச்சு… ஆனா நிம்மதி போச்சு…!” – வொர்க் ஃபிரைம் ஹோம்… மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…

16 minutes ago

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்…!” – திமுக ‘ஊழல் பெருச்சாளி’ என கிழித்து தொங்கவிட்ட வைகோ…! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…

25 minutes ago

“நாங்க பண்ண தப்பு இதுதான்”… அதிமுகவில் அடுத்த பிளான் ரெடி… மாவட்டந்தோறும் களமிறங்கும் புதிய படை…. EPS போட்ட ரகசிய உத்தரவு கசிந்தது….!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…

27 minutes ago

போடு ரகிட ரகிட…. மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி?…. வங்கிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…. விரைவில் வெளியாகப்போகும் அந்த ‘மெகா’ அறிவிப்பு….!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…

30 minutes ago