தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புகழ்பெற்ற நடிகர் ஆக இருந்தபோதிலும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினார். மக்களுக்கு பணியாற்ற விரும்பி அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்தார்.

அதன்படி தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை அறிவித்து கட்சியின் கொடியையும் பாடலையும் வெளியிட்டார். நேற்றைய முன்தினம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் விஜயை தேடி வந்தனர்.
கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்காக விக்கிரவாண்டியில் கூடினர். 20 கிலோமீட்டர் தொலைவிற்கு விக்கிரவாண்டி சாலையே ஸ்தம்பித்தது என்று கூறலாம். அந்த அளவுக்கு ஏற்பாடுடன் வெற்றிகரமாக த வெ க கட்சியின் மாநில மாநாடு நடந்து முடிந்தது.
இந்நிலையில் விஜய் கட்சித் தொண்டர்களுக்காகவும் நல்ல முறையில் நடத்திக் கொடுத்த நிர்வாகிகளுக்காகவும் நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். விஜய் நன்றி கடிதத்தில் எல்லோரையும் ஒவ்வொருவராக கைபிடித்து நன்றி கூற வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். எல்லோரும் கொடுத்த அன்பினால் நான் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன். சொல்வதற்கு வார்த்தையே இல்லை எனக்காக வெகு தூரம் தொலைவு பயணம் செய்து மாநாட்டுக்கு வந்த தோழர்களுக்கும் தோழிகளுக்கும் வீட்டிலிருந்து எனக்கு ஆதரவளித்த தாய்மார்களுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்று கூறியிருக்கிறார்.

உங்களது பேரன்பையும் கைத்தட்டல்களையும் ஆர்ப்பரிப்பையும் கண்டு நான் மணமகிழ்ந்து போனேன். அனைவரும் இணைந்து இனி நம் அரசியலை சரித்திரத்தில் இடம் பிடிக்க செய்வோம். ஆக்கபூர்வமான யாராலும் வெல்ல முடியாத அரசியலை உருவாக்குவோம். இனி தான் அதிக விமர்சனங்களை சந்திக்க போகிறோம். அதை எல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் வெற்றிக்காக போராடுவோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் விஜய்.
