விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 18 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் போட்டியாளர் ரவீந்தர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து போட்டியாளர் அரணவ் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரம் தர்ஷா குப்தா எலிமினேட் ஆனார். இதனைத் தொடர்ந்து தற்போது எஞ்சியுள்ள 15 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டியை நடைபெற்று வருகிறது.
)
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையேயான பிரச்சனையை கிளறி உள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. தற்போது பிக் பாஸ் வீட்டிலும் போட்டியாளர்கள் விஜே விஷால், சாச்சனா இருவரும் சேர்ந்து பிரியங்கா மற்றும் மணிமேகலை விவகாரத்தை பேசியுள்ளனர். அதை விஜய் டிவியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#VJVishal & #Sachana discussing #Priyanka and #Manimegalai issue….#BiggBossTamil8 #BiggBossTamil pic.twitter.com/piicLFMhmn
— Akshay (@Filmophile_Man) October 29, 2024
