Connect with us

CINEMA

நல்லா இருக்கு ஆனா ரஜினி ரசிகர்களுக்கு இது புடிக்காது.. க்ளைமேக்ஸ மாற்றி படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய AVM நிறுவனம்..

ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா கேரியரில் அதிகமாக இணைந்து வெற்றி படங்கள் கொடுத்தது இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில்தான். அவர்கள் இயக்கத்தில் வந்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் பாணியில் அமைந்தன. அதில் உச்சம் தொட்டது முரட்டுக் காளை திரைப்படம். இருவரும் இணைந்து 25 படங்கள் பணிபுரிந்துள்ளனர்.

இவர்கள் கூட்டணியில் உருவான ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் எங்கேயே கேட்ட குரல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவர்களின் கமர்ஷியல் பாணியில் இருந்து விலகி எதார்த்தமான பாணியில் உருவாக்கப்பட்டது. இந்த படத்துக்காக ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த இயக்குனருக்கான விருது எஸ் பி முத்துராமனுக்கும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.

   

இதையடுத்து அவர்கள் இணைந்து பணியாற்றிய படங்களில் ஒன்று நல்லவனுக்கு நல்லவன். ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி, ராதிகா, கார்த்திக், துளசி, விசு உள்ளிட்டவர்கள் நடித்த திரைப்படம் நல்லவனுக்கு நல்லவன் திரைப்படம். இந்த படத்தில் ரஜினிகாந்த் இளமையான மற்றும் முதுமையான என இரண்டு தோற்றங்களில் நடித்தார். கார்த்திக் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கார்திக்கும், துளசியும் ரஜினியைப் புரிந்து கொண்டு எல்லா சொத்துக்களையும் எங்களுக்குக் கொடுத்துட்டீங்க நீங்க உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கோங்க என்று கூறுவார். உடனே ரஜினி ராதிகாவின் புகைப்படத்தினை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவார். மிக எமோஷனலாக இந்த முடிவு வைக்கப்பட்டிருந்தது.

இதனை தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணனிடம் போட்டுக் காட்டியயுள்ளனர். அதைப் பார்த்த அவர் ”கிளைமேக்ஸ் நன்றாகத் தான் உள்ளது. ஆனால் ரஜினி ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் ரஜினி ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இப்போது உருவாகியுள்ளார். எனவே வில்லன்களை அடித்து இறுதியில் கார்த்திக்கை காப்பாற்றுவது போல் கிளைமேக்ஸ் சீன் வைத்தால் படம் கமர்ஷியலாக இருக்கும், ரஜினி ரசிகர்களை திருப்திப் படுத்துவதாக இருக்கும்” என்று கூறினார்.

அதை கேட்ட ரஜினியும் அதுதான் சிறப்பாக இருக்கும் என்று கூறி மிண்டும் ஷூட்டிங் நடத்தி அந்த காட்சியை க்ளைமேக்ஸாக இணைத்துள்ளனர். ஏவிஎம் சரவணன் சொன்னது போலவே அந்த க்ளைமேக்ஸ் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.  படமும் வெற்றி பெற்றது.

Continue Reading

More in CINEMA

To Top