ரஜினிக்கு மனைவி, மாமியார், சகோதரியாக என.. பல கதாபாத்திரத்தில் நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா..?

By Nanthini on மார்ச் 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் வெகு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்திருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் ரஜினி. இவருடன் பல திரைப்படங்களில் ஒன்று சேர்ந்து நடித்தவர் தான் பலம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா. இவர்களுடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்துமே ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டை பெற்றன. அதன்படி அபூர்வராகங்கள் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நடிகைகள் பலர் ஆரம்ப காலத்தில் கதாநாயகி ஆகவும் அதன் பிறகு அடுத்த கட்ட நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்து வந்தனர்.

தோல்வியில் தொடங்கி துரோகத்தில் முடிந்த ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை ! சில  கண்ணீர் பக்கங்கள் | Actress Srividya Life History

   

ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக நடித்த அதே நடிகருக்கே அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். அந்த வரிசையில் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு முக்கிய இடம் உண்டு. ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த்திற்கு அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு ஒரு கட்டத்திற்கு பின்னர் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

   

Manithan - Srividya takes care of Rajinikanth

 

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த முதல் நடிகை என்றால் அது நடிகை ஸ்ரீ வித்யா தான். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று அன்றைய கால சினிமா பிரபலங்களிடம் பாராட்டை பெற்றது.

ரஜினியின் அரசியல் 1989 முதல் 2020 வரை..! | nakkheeran

அதன்பிறகு சினிமாவில் மார்க்கெட்டில் இல்லாமல் போக தளபதி படத்தில் அதே ரஜினிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் ஸ்ரீவித்யாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்த ஸ்ரீவித்யா ஒரு சில காலங்களுக்குப் பிறகு உழைப்பாளி திரைப்படத்தில் ரஜினிக்கு அக்காவாக நடித்திருந்தார்.

போகிக்கு நான் புதுசா பிறந்த குழந்தையை தூக்கி எறிஞ்சுட்டேன் | Thalapathi |  Rajinikanth, Srividya

அதே சமயம் மனிதன் திரைப்படத்திலும் ரஜினியின் சகோதரியாக நடித்திருந்தார். மாப்பிள்ளை திரைப்படத்தில் ரஜினிக்கு மாமியாராக நடித்திருப்பார். இப்படி ஒரே நடிகர் அதாவது ரஜினிக்கு கதாநாயகி, அம்மா, அக்கா மற்றும் மாமியார் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்த ஒரே நடிகை என்ற புகழ் ஸ்ரீவித்யாவுக்கு தான் சேரும்.